Sunday, June 30, 2019
IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு . பதவி : குரூப் ஏ அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 7900 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.07.2019 .
Saturday, June 29, 2019
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர்
புதிய தலைமை செயலாளர் சண்முகம் :
கே.சண்முகத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளையுடன் ஓய்வு பெரும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். நிதித்துறை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம். வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்ற கே.சண்முகம்; 1985 ஜூன் 7-ம் தேதி அரசுப்பணியில் சேர்ந்தார்.
இவர் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலராக பொறுப்பு வகித்தவர். அரசின் பல முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, நிதி நிலைமையை திறம்பட கையாண்டவர். நிதித்துறை செயலாளராக கடந்த 2010- ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். நிதி நெருக்கடி காலங்களில் திறமையாக செயல்பாடுகளால் அரசின் நிதிச்சுமையை குறைத்தவர். மேலும் திமுக அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துரையின் செயலராக தொடர்ந்து பொறுப்பு வகித்தவர் ஆவார்.
Applications are invited for admission into three year B.Ed. Programme (Part-Time)
Friday, June 28, 2019
Thursday, June 27, 2019
Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019
Wednesday, June 19, 2019
Education TV Channel
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்படுகிறது.
இதன் ஒளிபரப்பு வருகிற 21-ந்தேதி முதல் தொடங்குகிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் தொலைக்காட்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கல்வி தொலைக்காட்சிக்கான ஸ்டூடியோ சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்பிடிப்பு கருவிகள், ஆளில்லா விமானம் ஆகியவற்றுடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. 15-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறையின் செயல்பாடுகள், மானியங்கள், நலத்திட்ட உதவிகள், பாடத்திட்டங்கள் குறித்து விளக்கும் புதிய முறைகள், கல்வித்துறையில் சிறப்பாக திறன்களை வெளிப்படுத்தி வரும் ஆசிரியர்களை பற்றிய நிகழ்ச்சிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு கிடைக்கும் உதவிகள், இதன்மூலம் அவர்கள் கல்வி கற்கும் திறன் போன்றவற்றை கல்வி தொலைக்காட்சி தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்தும். ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்து சாதனையாளர்களாக வருவது குறித்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு அறநெறி குறித்த வகுப்பு, சாலை போக்குவரத்து விதிகள், விளையாட்டு பயிற்சி, தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்து திறமைகளை வளர்க்கும் வகையில் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு அமையும்.
பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி தமிழக அரசின் கேபிள் டி.வி.யில் 200-ம் இடத்தில் இடம் பிடித்துள்ளது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை திறந்து வைக்கிறார்.
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP
TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP Click to View and Download your Question & Response Sheet
-
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் கருத்து தெரிவிக்க படிவங்கள் வெளியிடப்படுள்ளன
-
Dinamani Dinamalar Dinakaran Dinaethal Thinaboomi Google News Dinasudar Viduthalai Theekkathir New Indian Exp...
-
ஊரடங்கு விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்க இணையவழி கற்றல் வழிமுறைகள் மூலம் 49 புதிய படிப்புகளை ஏஐசிடிஇ அறிமுகம் செய்துள்ளது கரோனா நோய்த்தொற்று ப...