Time Line

“Teachers open the door, but you must enter by yourself” – Chinese Proverb

Monday, October 7, 2019

செல்ஃபி மோகம்.... புதுமணப்பெண் உள்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு..!

ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவின் மகள்கள் கனிதா, சினேகா ஆகியோர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்து வந்தனர்.  மகன் சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் நான்குபேரும், உறவினரான புதுமண தம்பதி பிரபு - நிவேதா மற்றும் யுவராணி ஆகியோருடன் ஊத்தங்கரையில் சினிமா பார்த்துவிட்டு, பாம்பாறு அணையை சுற்றிப் பார்க்க சென்றனர். அணையில் அதிகளவில் தண்ணீர் செல்வதைக் கண்ட அவர்கள், தண்ணீர் இறங்கி நின்றபடி செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தனர். கனிதா, சினேகா, சந்தோஷ், புதுப்பெண் நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க, பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்றபடி தனது செல்போன் மூலம் செல்ஃபி எடுத்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கனிதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி, யுவராணியை மட்டும் மீட்டு கரைசேர்த்தார். அதற்குள் மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதனர். தகவலறிந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டனர்.  புதுமணப்பெண், உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டப்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP  Click to View and Download your Question & Response Sheet