எல்லா விஷயத்திற்கும் ஆசிரியர் ஏன் விடுமுறை கோரிக்கை வைக்க வேண்டும்.
பொங்கலுக்கு விடுமுறை வேண்டும், கொரனாவிற்கு விடுமுறை வேண்டும்'-மாணவர்கள் நலம் கருதி என்ற வாசகம் வேற
ஏன் மாணவர்களின் பெற்றோர்கள் இல்லையா? சமூக ஆர்வலர்கள்/
அரசியல் வாதிகள் இல்லையா?. எங்களின் கோரிக்கை ஏற்று அரசு விடுமுறை விட்டது என்ற பெருமை வேற.
போராட்ட காலத்தில் பொது மக்கள்
/ நீதி மன்ற அறிவிப்பால் பட்ட அவமானம் போதாதா? என்ன சாதித்தோம் போராட்டத்தின் போது? தயவு செய்து மாணவர்கள் நலம் கருதி என்று கூறி விடுமுறை கேட்காதீர்கள்.
ஆசிரியர்கள் விளம்பர பொருள் அல்ல.
பொங்கல் விடுமுறைக்கு கை ஏந்திய ஆசிரியர்கள் என்ற செய்தி செய்திதாளில் வந்ததே.
அதை கண்டு ஆசிரியர்களின் உள்ளம் எப்படி இருத்திருக்கும்.
தயவு செய்து இது போன்ற விசயத்திற்கு அரசிடம் கோரிக்கை வேண்டாம்.அரசே பார்த்து கொள்ளட்டும்.
தவறு இருப்பின் மன்னிக்கவும்.
ஆசிரியர்களின் நிலை சமூகத்தில் திருப்தியாக இல்லை.
பள்ளியிருப்பின் பணி செய்வது நமது கடமை.
யாருக்காவும் யாசகம் வேண்டாம்'