Time Line

“Teachers open the door, but you must enter by yourself” – Chinese Proverb

Wednesday, September 16, 2020

TNTEU - Students Guidelines for Online Examination

 TNTEU - Students Guidelines for Online Examination 




Official Link


M.Ed. Practical Guidelines

ஆன்லைன், நேரடி செமஸ்டர் தேர்வு: ஏழு பல்கலைகளில் புதுமை திட்டம்

ஆன்லைன், நேரடி செமஸ்டர் தேர்வு: ஏழு பல்கலைகளில் புதுமை திட்டம்



கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும், கடைசி செமஸ்டர் தேர்வில், மாணவர்கள் வீட்டிலோ அல்லது வெளியில் இருந்தோ எழுதி, ஆன்லைன் மற்றும் விரைவு தபாலில் விடைத்தாள்களை அனுப்பலாம் என, சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

இதேபோன்ற தேர்வு திட்டத்தை, மேலும், ஆறு பல்கலைகள் அறிவித்து உள்ளன. சென்னை பல்கலையின், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள், வரும், 21ம் தேதி துவங்க உள்ளன. தேர்வு குறித்து சென்னை பல்கலை வெளியிட்ட வழிமுறைகள்: கடந்த, 2019 - 20ம் கல்வியாண்டில், இறுதியாண்டு படித்த மாணவர்கள் மட்டும், கடைசி செமஸ்டர் தேர்வை, வீட்டில் இருந்தே எழுதலாம்.

90 நிமிடங்கள்

தேர்வு, 90 நிமிடங்கள் நடக்கும். தேர்வு நடத்தப்படும் இணையதள முகவரி, தேர்வுக்கான பொறுப்பு அதிகாரிகளின் விபரங்கள் போன்றவை, மாணவர்களின் மொபைல்போன் எண் மற்றும், 'வாட்ஸ் ஆப்' எண்ணிற்கு அனுப்பப்படும். இணையதளத்தில் வினாத்தாள் வழங்கப் படும். காலை, 9:30 முதல், 11:30 மணி வரையிலும், பகல், 1:30 முதல், 3:30 மணி வரையும் தேர்வு நடத்தப்படும். இதில், காலை, 10:00 முதல், 11:30 மணி வரை மட்டும் தேர்வு எழுத அனுமதிக்கப் படும். அதேபோல், 2:00 முதல், 3:30 மணி வரை மட்டுமே, தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.

மாணவர்கள், 'A-4' வடிவ காகிதத்தில், 18 பக்கங்களுக்கு அதிகமாகாமல் தேர்வு எழுத வேண்டும். அதில், முகப்பு பக்கத்தில், மாணவர்களின் பெயர், வகுப்பு, பட்டப்படிப்பு குறியீடு, பதிவெண் போன்ற விபரங்களையும் எழுத வேண்டும். இந்த தேர்வுக்கான மாதிரி தேர்வு, நாளை மறுநாள் முதல் இரண்டு நாட்களுக்கு நடத்தப்படும்.

விடைத்தாளில் டைப் செய்யவோ, புத்தகத்தின் பக்கங்களை ஒட்டவோ அனுமதி இல்லை. வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்வதற்கு, மாணவர்களுக்கு குறிப்பிட்ட அவகாசம் வழங்கப் படும். அதற்குள் பதிவிறக்கம் செய்து, வாட்ஸ் ஆப் மற்றும் மொபைல்போனில், SMS., வழியே பதிவிறக்கம் செய்த விபரத்தை தெரிவிக்க வேண்டும்.

விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும், கையெழுத்திட வேண்டும். பின், விடைத்தாளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஸ்கேன் செய்து, பல்கலையின் இணையதளத்தில், 'லாக் இன்' செய்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த பணிகளை, தேர்வு முடிந்த மூன்று மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும். ஒரு முறை பதிவேற்றிய விடைத்தாள்களில் மாற்றம் செய்ய முடியாது. இணைய பிரச்னையால் பதிவேற்ற முடியாவிட்டால், அதற்கு குறிப்பிட்ட அவகாசம் தனியாக வழங்கப்படும்.

பதிவேற்றியதும், அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும். உடனடியாக தேர்வு பொறுப்பு அதிகாரிகளுக்கு, விடைத்தாள் பதிவேற்றம் செய்ததை தெரிவிக்க வேண்டும். இணையதளத்தில் விடைத்தாள்களை பதிவேற்ற முடியாதவர்கள், கல்லுாரி முதல்வருக்கு, விரைவு தபாலில் துணி இழையால் செய்யப்பட்ட உறையில் வைத்து, விடைத்தாள்களை அனுப்ப வேண்டும்.

மூன்று மணி நேரத்துக்குள் அதை அனுப்பி, அதன் பதிவு எண்ணை, தேர்வு பொறுப்பாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. கொள்குறி வினாக்கள் இதேபோன்ற தேர்வு முறையை, அண்ணாமலை பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை ஆகிய, ஆறு பல்கலைகள் அறிவித்துள்ளன

திருவள்ளுவர் பல்கலை, தனியாக ஆன்லைன் வழி நேரடி தேர்வை நேற்றே துவங்கி விட்டது. பெரியார் பல்கலை தேர்வு அட்டவணையை மட்டும் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலை ஆன்லைன் தேர்வை, முதல் முதலாக அறிவித்து, நேரடியாக ஆன்லைன் வழி கொள்குறி வினாக்கள் உடைய தேர்வாக நடத்துகிறது.'புத்தகத்தை பார்த்து எழுதக்கூடாது; ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கூட்டாக சேர்ந்து எழுதக்கூடாது; காப்பி அடிக்க கூடாது' என்பது போன்ற அறிவிப்புகளை, சென்னை பல்கலை உள்ளிட்ட ஆன்லைன் எழுத்து தேர்வு நடத்தும் பல்கலைகள் வெளியிடவில்லை.

கல்வியை கேலி பொருளாக்குவதா? பல்கலை பாதுகாப்பு குழு கண்டனம்!

கல்வியை கேலி பொருளாக்குவதா? பல்கலை பாதுகாப்பு குழு கண்டனம்!



ஆன்லைன் தேர்வு என்ற பெயரில், கல்வியை கேலி பொருளாக மாற்றி இருக்கும் பல்கலைகளின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது' என, மதுரை காமராஜ் பல்கலை பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது.

அக்குழு தலைவர் சீனிவாசன் தெரிவித்து உள்ளதாவது:இறுதியாண்டு, 'ஆன்லைன்' தேர்வு களை எழுத, கல்லுாரிகளுக்கு, மதுரை காமராஜ் பல்கலை வழிகாட்டுதலை தெரிவித்துள்ளது.அதில், 'மாணவர்களுக்கு மெயில் மற்றும், 'வாட்ஸ் ஆப்'பில் வினாத்தாள் அனுப்பி, அவர்கள் வீட்டில் இருந்தே, ஒரு மணி நேரத்தில் தேர்வு எழுத வேண்டும். 'அவர்கள் காப்பி அடிக்காமல், நேர்மையாக எழுதினர் என, பெற்றோர் கையொப்பம் இட வேண்டும்.

இணையவசதி இல்லாத மாணவர் விடைத்தாளை, தபால் மூலம் தேர்வு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்' என தெரிவித்துள்ளது.இது என்ன முறை. கல்வியை இவ்வளவு மோசமான ஒரு கேலி பொருளாக மாற்றலாமா. ஒருபுறம் நீட் தேர்வுகள், கடும் கண்காணிப்புடன், பல லட்சம் பேர் பங்கேற்க, நடந்துள்ளது.

கல்லுாரி இறுதித் தேர்வை, அவரவர் வீட்டில் இருந்தே எழுதி அனுப்பலாம் என்பதா. இது, உயர்கல்வியை கேவலமாக்கும் செயல். மாணவர் எதிர்காலம் பாதிக்கும் இந்த முறையை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, September 9, 2020

Alagappa University Secretarial Assistant Job

Alagappa University Secretarial Assistant Job

Official Link



அரசு கல்லூரிகளே போன்றே தனியார் கல்லூரிகளுக்கும் ஒரே ஷிப்ட் முறை

 அரசு கல்லூரிகளில் கொண்டு வரப்பட உள்ள ஒரே ஷிப்ட் நடைமுறையை, தனியார் கல்லூரிகளுக்கும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, உயர் கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டு கல்லூரிகளின் பாட வேளை நேரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி காலை, மாலை என இரு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒரு ஷிப்ட், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஒரு ஷிப்ட் என்ற நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 2020- 21ம் கல்வியாண்டு முதல் பழைய முறைப்படி, காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வகுப்புகள் நடத்த அனுமதியளித்து கடந்த ஜூலை மாதம் தமிழக உயர் கல்வித் துறை செயலாளர், அரசாணை பிறப்பித்தார்.

இந்த அரசாணையை, தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுய நிதி கல்லூரிகளிலும் அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி, திருவண்ணாமலையைச் சேர்ந்த சுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் அரசாணை பாரபட்சமாக உள்ளதாகவும், மாநிலம் முழுவதும் உள்ள 1,249 தனியார் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், மனுவுக்கு செப்டம்பர் 22ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக உயர் கல்வித்துறை செயலாளருக்கும், கல்லூரி கல்வி இயக்குனருக்கும், உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Thursday, September 3, 2020

Last date for Alagappa University Departments Online submission of applications is extended up to 15.09.2020.

 Last date for Alagappa University Departments Online submission of applications is extended up to 15.09.2020.



அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
   
அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை கொரோனா வைரஸ்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஜெனீவா:

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் பாடாய்படுத்துகிறது. கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பு மருந்துகளோ, தடுப்பூசியோ இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அனைத்து நாடுகளும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியே தொற்றை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் பல மாதங்களாக இந்த ஊரடங்கை அமல்படுத்தி வருவதால் நாடுகளின் பொருளாதாரம் வேகமாக சரிந்து வருகிறது. ஏழை, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த தொடர் ஊரடங்கு நடவடிக்கை அனைத்து தரப்பினரையும் பாதித்து உள்ளது.

எனவே பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. சில நாடுகள் மொத்தமாக ஊரடங்கை நீக்கி உள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனாவின் வீரியம் இன்னும் குறையாத நிலையில், இப்படி ஊரடங்கை தளர்த்தும் நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அதன் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியிருப்பதாவது:-

டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் அவசர அவசரமாக ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும். ஊரடங்கை தளர்த்துவதில் தீவிரம் காட்டும் நாடுகள் வைரஸ் பரவலை தடுப்பதையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அது ஒரு சாத்தியமற்ற சமநிலை அல்ல.

நாடுகள், சமூகங்கள் மற்றும் தனிநபர்கள் 4 அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது கொத்துகளாக வைரஸ் செழித்து வளர்கிறது; பாதிப்புக்குள்ளாகும் குழுக்களை பாதுகாத்தல்; மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள தனித்தனியாக நடவடிக்கை எடுக்கின்றனர்; மேலும் தொற்றுக்குள்ளானவர்களை கண்டுபிடித்தல், தனிமைப்படுத்தல், பரிசோதித்தல் மற்றும் கவனித்தல், அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து தனிமைப்படுத்துதல் போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று நாடுகளின் சுகாதார அமைப்புகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை கண்டறிய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 105 நாடுகள் பதிலளித்து உள்ளன. இந்த ஆய்வில் பதிலளித்த 90 சதவீத நாடுகளும், கொரோனா தொற்றால் தங்கள் சுகாதார அமைப்பு பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்து உள்ளன. மேலும் வழக்கமான நோய்த்தடுப்பு மற்றும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

70 சதவீத நாடுகள் இடையூறுகள் குறித்து தெரிவித்து உள்ளன. ஆய்வில் பங்கேற்ற கால்பங்கு நாடுகள் தங்கள் அவசரகால சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளன. கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதத்துக்கு இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வு, தற்போதைய கொரோனா போன்ற சூழலை எதிர்கொள்வதற்கு சிறந்த சுகாதார அமைப்பை வைத்திருக்க வேண்டிய தேவையை வெளிப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியுள்ளார்.

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP  Click to View and Download your Question & Response Sheet