Time Line

“Teachers open the door, but you must enter by yourself” – Chinese Proverb

Wednesday, December 1, 2021

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது

சுய ஒழுக்கம் (Self Discipline) - ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டியது 

1. தொடர்ச்சியாக இரண்டு முறை யாரையும் Phoneல் அழைக்காதீர்கள். அவர்கள் முக்கிய வேலையாக இருக்கலாம், அல்லது பேச முடியாத சூழ்நிலையில் இருக்கலாம்.

2. திருப்பித் தருகிறேன் என்று உங்களிடம் பணம் கடனாக கேட்பவரிடம் மனப்பூர்வமாக கேட்டுக்கொடுங்கள். இது திரும்ப வருமா, வராதா என. இது உங்கள் Character ரை அவர் உணரச் செய்யும். இதே போல், இரவல் கொடுக்கும் பேனா, புத்தகம், Lunch box, குடை போன்றவைக்கும்.

3. Hotelல் சாப்பிடலாம் என நண்பர் உட்பட யார் அழைத்தாலும், Menu cardல் costly யாக உள்ள எதையும் Order செய்யாதீர்கள். அழைத்தவரையே உங்கள் விருப்பப்படி Order சொல்லுங்கள் என வேண்டலாம்.

4. தர்மசங்கடமான இது போன்ற கேள்விகளை தவிர்க்கலாம்.
இன்னும் கல்யாணம் ஆகலயா?
குழந்தைகள் இல்லையா?
இன்னும் சொந்தவீடு வாங்கவில்லையா?
ஏன் இன்னும் Car வாங்கவில்லை?
இது நமது பிரச்சினை இல்லைதானே!"

5. தானியங்கி கதவை திறக்க நேர்ந்தால் பின்னால் வருபவர் ஆணோ, பெண்ணோ, சிறியவரோ, பெரியவரோ அவர்கள் வரும்வரை மூடாமல் பிடித்திருப்பது அவர்களை சமூகத்தில் பொறுப்புள்ளவர்களாக மாறச்செய்யும்!

6. நண்பருடன் Taxiயில் சென்றால. இம்முறை இயலாவிட்டால் மறுமுறை நீங்கள் காசு கொடுத்துவிடுங்கள்.

7. மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளியுங்கள். மோசமாக இருந்தாலும், Choiceல் வைத்திருக்கலாம்.

8. அடுத்தவர்கள் பேசும்போது இடைமறிக்காதீர்கள். அவர்கள் கொட்டட்டும். இறுதியில் அவர்களுக்கே நல்லது தெரிந்துவிடும்.

9. நீங்கள் கிண்டலடிப்பதை சம்பந்தப்பட்டவர் ரசிக்கவில்லை என்றால், மீண்டும் அதைச் செய்துவிடாதீர்கள். அவரை உற்சாகப்படுத்துங்கள். உங்கள் மதிப்பை அது மேம்படுத்தும்.

10. யார் உதவினாலும் பாரபட்சமின்றி நன்றி சொல்லுங்கள்.

11. பொதுவில் புகழுங்கள். தனியாக இருக்கையில் குறைகளை சுட்டிக்காட்டலாம்.

12. உடல்பருமனை ஒருபோதும் கிண்டலடிக்காதீர்கள்.
"நீங்கள் பார்க்க Smartடாக, Cuteடாக இருக்கீங்க" என்று கூறுங்கள். உடல் எடை குறைக்க அவராக கேட்டால் ஒழிய நாம் அறிவுரை வழங்கக் கூடாது.

13. யாராவது அவர்கள் Photoவைக் காட்ட Phoneனைக் கொடுத்தால் Galleryயில் இடது வலதாக தள்ளிப் பார்க்காதீர்கள். அடுத்து என்ன இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

14. யாரும் தனக்கு Doctor Appointment இருக்கிறது, போகவேண்டும் என்றால், உடனே என்ன நோய்க்கு என்று கேட்டுவிடாதீர்கள். அவர்களின் தனிப்பட்ட நோய்கள் பற்றி மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று கருதலாம். *விரைவில் நலமடைவீர்கள் என்று நம்புகிறேன்* என்று கூறலாம்.

15. நண்பர்களிடமோ யாரிடமோ நேரில் சந்தித்துப் பேசும்போது Phoneனை நோண்டிக்கொண்டிருக்காதீர்கள்.

16. கேட்டால் தவிர அறிவுரை வழங்காதீர்கள்.

17. நீண்ட நாட்கள் கழித்து யாரையும் சந்தித்தால், அவர்களின் சம்பளம், வயது ஆகியவற்றைக் கேட்காதீர்கள். அவர்களாகவே சொன்னால் தவிர.

18. தெருவில் யாரையாவது சந்திக்க நேர்த்தால், Styleகாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்தால் கழற்றிவிட்டுப் பேசுங்கள். கண்பார்த்து பேசுதல் நம்பிக்கைக்கு நல்லது.

19. யார் தனிப்பட்டப் பிரச்சினையிலும் நேரடியாக வலிய போய் தலையிடாதீர்கள்.

20. இறுதியாக ஒன்று. இதுபோன்ற தகவல்கள் மற்றவர்களுக்கும் பயன்தரும் என்றால் நன்றி

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP  Click to View and Download your Question & Response Sheet