செப்டம்பர்
8-ம் தேதி பிசியோதெரபி மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதால் இந்த தினம் பிசியோதெரபி தினமாக கொண்டாடப்படுகிறது.
கழுத்துவலி,
தோள்ப்பட்டைவலி, கால்வலி, முதுகுவலி, மூட்டுவலி, குதிகால்வலி, பக்கவாதம் மற்றும் நரம்பு சம்பந்தபட்ட
பிரச்சனைகளுக்கும், சர்க்கரையின்
அளவைகட்டுக்குள் வைக்கவும், ஆரோக்கியமான
உடல்திறனுடன் இருக்கவும் உடல்பருமன்
மேம்பாட்டை தக்கவைத்து கொள்ளவும், அறுவை சிகிக்சைக்குப்பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் வலியை தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை பின்விளைவு ஏற்படுத்தாத வண்ணம் சரி செய்வதே பிசியோதெரபி மருத்துவமுறையின் சிறப்பம்சம் ஆகும்.
உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டுபிசியோதெரபி சிகிக்சை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் விதமாக புதிதாக விரைவில் தொடங்கயிருக்கும், அழகப்பா பிசியோதெரபி கல்லூரியில், அழகப்பா கல்வி குழுமத்தின் தலைவர் Dr. வயிரவன் ராமநாதன் அவர்களின் தலைமையில் 07-09-2019 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை இலவச பிசியோதெரபி மருத்துவ மற்றும் ஆலோசனை முகாம் அழகப்பா அறக்கட்டளை வளாகம் அருகில் உள்ள அரங்கத்தில் நடைபெற உள்ளது. Rs.2,000/- மதிப்புள்ள எலும்பு திறன் ஆய்வு (Bone Density Scan) மற்றும் உயர் மருத்துவரின் சிகிக்சை/ஆலோசனை இலவசமாக வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment