Time Line

“Teachers open the door, but you must enter by yourself” – Chinese Proverb

Friday, July 10, 2020

அடேயப்பா, விவசாயத்தில் இவ்வளவு வாய்ப்புகளா! பிளஸ் 2 மாணவர்களுக்கு...

+2 முடிச்சாச்சு... இன்ஜினியரிங், கலை & அறிவியல், பொருளாதாரம், சட்டம்... இப்படிப் பொதுவான துறைகளில் சேர இப்போவே காலேஜ் ஃபார்ம் வாங்கத் தயாராகிக் கொண்டிருப்போம்! அதற்கு முன் விவசாயத்துறையில் மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறதென்று தெரிந்துகொள்வோமா?!

மனிதன் உணவு உண்ணும் வரை, விவசாயத்துறை இருக்கும்!

* வேளாண் அலுவலர் மற்றும் உதவி அலுவலர், விவசாயக் கடன் அலுவலர் போன்ற மாநில விவசாயத்துறை சார்ந்த அரசுப் பணிகள் காத்திருக்கின்றன.

* உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு.

* விவசாய உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்கள், விதை உற்பத்தி நிலையங்கள், உணவு பதனிடும் ஆலைகள், தனியார் விவசாய எஸ்டேட்டுகள் போன்றவற்றில் பணிகள்.

* வேளாண்மை படிப்புக்கேற்ற வங்கித் தேர்வுகள் எழுதலாம்.

* ஐஏஎஸ் ஆக விரும்பும் மாணவர்களுக்கு வேளாண்மை படிப்பு நல்ல தேர்வு.

* பண்ணை, மீன் வளர்ப்பு, பால் உற்பத்தி, காளான் உற்பத்தி, தேனீ வளர்ப்பு, உரம் தயாரித்தல் மற்றும் விற்பனை போன்ற சுயதொழில் செய்வதற்கு வங்கிகள் மற்றும் நபார்டு அமைப்பின் மூலம் பலதரப்பட்ட தொழிற்கடன்கள் வழங்கப்படுகின்றன.

* விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டி வணிகப் பொருள்களாக மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்பு காத்திருக்கிறது. இதற்கான பயிற்சி மற்றும் கடன் உதவிகளை அரசின் வேளாண்துறை, தனியார் விவசாய நிறுவனங்கள் மற்றும் வேளாண் கல்லூரிகள் வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

* 'அக்ரி கிளினிக்' வைத்து விவசாயிகளுக்குப் பயிர் மேலாண்மை, நோய்த்தொற்று மற்றும் விவசாய ஆலோசனைகளை வழங்கலாம்.

* எம் எஸ் சி அக்ரி படித்தவர்கள் வேளாண் கல்லூரிகளில் ஆசிரியராக சேர முடியும்.

* ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வேளாண் விஞ்ஞானியாக உயரலாம்!

உழவு செய்வது மட்டுமே அல்லாமல், இவ்வாறு பல அமோகமான வாய்ப்புகளையும் அளிக்கக்கூடியதுதான் வேளாண் படிப்பு!


No comments:

Post a Comment

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP  Click to View and Download your Question & Response Sheet