Time Line

“Teachers open the door, but you must enter by yourself” – Chinese Proverb

Tuesday, July 2, 2019

பென் டிரைவ்க்கு தமிழ் வார்த்தை என்ன? சட்டப்பேரவையில் திமுக கேள்வி



வீரமாமுனிவர் காலத்தில் இருந்து இதுபோன்ற புதிய சொல் அகராதிகள் உருவாகப்பட்டுள்ளன. அதுபோல புதிய தமிழ் நவீன சொல் அகராதி தயாரிக்கப்பட்டு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் என அதிமுக உறுதி.

தமிழகச் சட்டப்பேரவையில் பேசிய திமுகவினர் பென் டிரைவ் உள்ளிட்ட அறிவியல் சொற்களுக்கு ஏற்ற தமிழ் கலைச்சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர்

சேலம் தொழில் பயிற்சி நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும். 55 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சேலம் தொழில் பயிற்சி மையத்தில் உள்ள செய்முறை கூடத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர். அவர்களுக்கு தனியாக ஒரு அரங்கம் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நேஷனல் கவுன்சில் ஃபார் ஒகேஷனல் டிரைனிங் விதிக்கு உட்பட்டு சேலம் தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 1962ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தொழில் பயிற்சி மையத்தின் கட்டமைப்பு மேம்படுத்த வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது.

மேலும், எதிர்காலத்தில் ஆன்லைனின் தேர்வுகள் நடத்தப்படலாம். எனவே தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். மகளிர் தங்கும் விடுதியில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கூடுதல் கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும் எனவும் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவற்றை விரைவில் நிறைவேற்றுவதாக அதிமுக உறுதியளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 30 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அங்கு ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. கணிணி சார்ந்த பொறியியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் நேரடியாக 9 லட்சம் மாணவர்களுக்கும் மறைமுகமாக 5 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

தகுதியான மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் உள்ளிட்ட மென்பொருள் நிறுவனங்கள் வேலை தருகின்றன. இந்த நிறுவனம் 10, 12 வகுப்புகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, பட்டம் பெற்ற மாணவர்களுக்கு ஈடாக அவர்களின் திறனை மேம்படுத்துகிறது எனவும் அதிமுகவினர் கூறினர்.

அறிவியல் கலைச்சொற்கள் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும் என திமுகவும் கோரிக்கை வைத்தது. உதாரணமாக சிடி (Compact Disc) என்ற சொல்லுக்கு குறுந்தகடு என்ற தமிழ்ச்சொல் உள்ளது. இதைப்போல பென் டிரைவ் (Pen Drive) உள்ளிட்ட ஆங்கிலத்தில் உள்ள அறிவியில் சொற்களுக்கு தமிழ் சொற்களைக் உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியது திமுக.

இதற்கு பதிலளித்த அதிமுக, சொல் உண்டியல் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளதாகவும் கிட்டத்தட்ட 8 லட்சம் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது தமிழ் வழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளின் பாடத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் விரைவில் உலகத் தமிழ் மாநாட்டில் இந்த புதிய சொற்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மாண்புமிகு சுப்ரமணியம் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழில் சட்டச் சொல் அகராதியை உருவாக்கினார். எல்லா துறைகளிலும் தமிழ் கலைச்சொற்களை பயன்படுத்தும்படி புதிய தமிழ் கலைச்சொற்கள் தமிழ் மொழி வல்லுநர்களால் உருவாக்கப்படும்.

வீரமாமுனிவர் காலத்தில் இருந்து இதுபோன்ற புதிய சொல் அகராதிகள் உருவாகப்பட்டுள்ளன. அதுபோல புதிய தமிழ் நவீன சொல் அகராதி தயாரிக்கப்பட்டு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படும் எனத் தெரிவித்தது


No comments:

Post a Comment

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST TNTET PAPER-II-2022 - VIEW QP  Click to View and Download your Question & Response Sheet