ஸ்மார்ட்போன்
உலகில் ட்ரூ காலர் அப்ளிகேஷனிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் நமக்கு அறிமுகம் இல்லாத புது எண்களில் இருந்து வரும் அழைப்புகளின் தகவல்களை ட்ரூ காலர் அப்ளிகேஷன் திரட்டி கொடுக்கும். அதாவது புது நம்பர் அழைப்பு யாரிடமிருந்து வருகிறது, அழைப்பவரின் தகவல், எங்கிருக்கிறார், எப்படிப்பட்டவர், எந்த துறையை சார்ந்தவர், ஏன்..? சிலரது விலாசங்களை கூட, ட்ரூ காலர் அப்ளிகேஷன் காண்பித்துவிடும். இதனால் தேவையில்லாத அழைப்புகளை எளிதாக தவிர்த்துவிட முடியும். இத்தகைய சேவையை வழங்கிவந்த ட்ரூ காலர் அப்ளிகேஷன் தற்போது, இணையதளத்தை பயன்படுத்தி வாய்ஸ் கால் பேசும் வசதியையும் வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு வாட்ஸ் ஆப் கால் வசதியை போல சிம் கார்டு எண் இல்லாமல், கணக்கு ஐ.டி.-யை
கொண்டே போன் கால் பேசமுடியும்.
#தொழில்நுட்பம்
No comments:
Post a Comment