EPFO பயனர்கள் கவனத்திற்கு – PF பேலன்சை சரிபார்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் தங்களது கணக்கு இருப்பை சரிபார்க்க ஆன்லைன் மூலம் சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
PF இருப்பு
பொதுவாக மாத ஊதியம் பெரும் ஒவ்வொரு தொழிலாளர்களும் தங்களது பணத்தை எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது வழக்கம். இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது தான் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO). இந்த EPFO அமைப்பு என்பது மத்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறந்த சேமிப்புத் திட்டமாகும். இது எதிர்கால சேமிப்பிற்காக பணியாளர்களின் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து, அதனை மீண்டும் வழங்குகின்றன. இந்த EPFO சேமிப்பு மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 6 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.
இப்போது, ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதி (EPFO) கணக்கின் இருப்பை சரிபார்க்க அலுவலகங்களுக்கு செல்லத்தேவையில்லை. ஏனென்றால் இந்த சேவைகள் அனைத்தும் தற்பொழுது ஆன்லைன் மூலம் எளிதாக்கப்பட்டுவிட்டது. இதற்காக EPFO பயனர் ஒருவர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து தங்கள் வருங்கால வைப்பு நிதி இருப்பை சரிபார்க்கலாம். மேலும், இணைய இணைப்பு இல்லாதவர்களுக்கும் கூட இந்த சேவைகள் SMS மூலம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் EPFO கணக்கு இருப்பை சரிபார்ப்பதற்கான எளிய வழிமுறைகளை கீழே விரிவாக காணலாம்.
SMS:
- உங்கள் மொபைல் போனிலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு SMS அனுப்புவதன் மூலம் அல்லது மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவோ PF இருப்பைச் சரிபார்க்கலாம்.
- அந்த வகையில் EPFO பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு ‘EPFO UAN LAN’ என்ற இந்த செய்தியை அனுப்பலாம்.
- இந்த செய்தியில் உள்ள ‘LAN’ என்பது உங்கள் மொழியைக் குறிக்கிறது.
- உங்களுக்கு ஆங்கிலத்தில் தகவல் தேவை என்றால், LAN க்கு பதிலாக, ENG என்று எழுத வேண்டும்.
- அதே போல் ஹிந்திக்கு HIN என்றும் தமிழுக்கு TAM என்றும் எழுத வேண்டும்.
மிஸ்டு கால்:
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011 22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் PF இருப்பைச் சரிபார்க்கலாம்.
UMANG ஆப்:
- உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், UMANG ஆப் பயன்பாட்டின் மூலம் எப்போது வேண்டுமானாலும் உங்கள் EPF இருப்பை சரிபார்க்கலாம்.
- இதற்கு, UMANG செயலியை திறந்து EPFO என்பதை கிளிக் செய்யவும்.
- இதில், Employee Centric Services என்பதை தேர்வு செய்து, அதன் பிறகு View Passbook என்பதை கொடுக்கவும். பிறகு UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
- இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP பெறுவீர்கள்.
- அதை உள்ளிட்ட பிறகு, நீங்கள் EPF இருப்பை காணலாம்.
இணையதளம்:
- ஆன்லைனில் உங்கள் இருப்பைச் சரிபார்க்க, EPF பாஸ்புக் போர்ட்டலை திறக்கவும்.
- உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி இந்த போர்ட்டலில் உள்நுழையவும்.
- பின்னர் Download / View Passbook என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது பாஸ்புக் பக்கம் திறக்கும்.
- அதில் PF இருப்பை காணலாம்.
No comments:
Post a Comment