லொக்கேஷன் ஸ்பூஃபிங் என்பது உங்கள் இருப்பிடத்தை போலியாக காட்டுவது அல்லது மறைப்பது என்பதாகும்.
நாம் பயன்படுத்தும் டெஸ்க்டாப் மற்றும் ஃபோனுக்கு VPN சர்விஸ்கள் கிடைக்கின்றன. இவை ஃப்ரீ மற்றும் பெய்டு வெர்ஷன்களில் வருகின்றன. ஆனால் VPN என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது..? உள்ளிட்டவை குறித்து இங்கே பார்க்கலாம்.
VPN (Virtual private network) என்றால் என்ன?
Virtual Private Network என்பது ஒரு தனியார் நெட்வொர்க் ஆகும். இது நீங்கள் இன்டர்நெட்டில் பிரவுசிங் செய்யும் போது உருவாக்கப்படும். இது ஆன்லைன் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது மற்றும் நம் ஒட்டுமொத்த பிரைவசியை மேம்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்கள் VPN கனெக்ஷனை இயக்கும் போது, அது உங்கள் டிவைஸிற்கும், நீங்கள் செல்ல விரும்பும் வெப்பேஜிற்கும் இடையில் ஒரு மிடில் மேனாக செயல்பட்டு பாதுகாப்பான பாதையை உருவாக்குகிறது. உங்கள் டேட்டா எக்ஸ்டர்னல் VPN சர்வருக்கு அனுப்பப்படும். அது உங்களை நீங்கள் விரும்பும் வெப்சைட்டுடன் இணைக்கும். VPN சர்வர் இதை செய்யும் போது, உங்கள் IP அட்ரஸ் மாற்றப்படும், இதனால் குறிப்பிட்ட வெப்சைட்களால் உங்கள் இருப்பிடத்தை துல்லியமாக ட்ராக் செய்ய முடியாது.
VPN எவ்வாறு செயல்படுகிறது?
நீங்கள் உங்கள் காரில் ஒரு ஷாப்பிங் மாலுக்கு செல்ல கூடிய நேரான சாலையில் செல்வதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் காரின் நம்பர் பிளேட் தான் இங்கே உங்கள் ஐபி அட்ரஸ். நீங்கள் மாலுக்கு செல்வதையும், உங்கள் காரின் நம்பர் பிளேட்டையும் அந்த சாலையில் உள்ள அனைவரும் பார்ப்பார்கள். இதை தொடர்ந்து அவர்கள் உங்களை கண்காணிக்க அதை பயன்படுத்தலாம். இது எதற்கு சமமம் என்றால் VPN இல்லாமல் ஆன்லைனில் பிரவுஸ் செய்வதை போன்றது.
VPN என்பது அதே ஷாப்பிங் மாலுக்கு செல்லும் இரண்டாவது சாலை அதாவது யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழி போன்றது. VPN எனப்படும் சுரங்கப்பாதை உங்கள் அசைவுகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்தாது. மேலும் இது மாலுக்கு அதாவது நீங்கள் விரும்பும் வெப்சைட்டிற்கு செல்லும் வழியில் உங்கள் நம்பர் பிளேட்டை அதாவது உங்கள் ஐபி அட்ரஸை மாற்றி விடும். நீங்கள் திரும்பி வரும் போதும் அது மீண்டும் ஐபி அட்ரஸை மாற்றும்.
VPN-ஐ ஏன் பயன்படுத்த வேண்டும்?
பாதுகாப்பு:
நாம் ஏற்கனவே மேலே பார்த்தது போல VPN கனெக்ஷனை பயன்படுத்தினால் உங்கள் IP அட்ரஸை வெப்சைட்களால் காண உடையது. இதனால் உங்கள் அடையாளம் மற்றும் இருப்பிடம் அடையாளம் காணப்படாது. அரசாங்கம் முதல் சைபர் கிரிமினல்கள் வரை உங்களை எளிதாக கண்காணிப்பதை VPN தடுக்கும்.
லொக்கேஷன் ஸ்பூஃபிங்:
லொக்கேஷன் ஸ்பூஃபிங் என்பது உங்கள் இருப்பிடத்தை போலியாக காட்டுவது அல்லது மறைப்பது என்பதாகும். உங்கள் லொக்கேஷனை ஸ்பூஃபிங் செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று VPN-ஐ பயன்படுத்துவது. VPN வேறொரு நாட்டில் உள்ள சர்வருடன் இணைக்கவும், வேறு ஐபி முகவரியைப் பெறவும் உங்களை அனுமதிக்கிறது.
ஆன்லைன் சென்ஸார்ஷிப்:
பல நாடுகள் பல்வேறு வெப்சைட்களுக்கான அக்ஸஸை தடுத்துள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளைத் தவிர்க்க VPN உங்களை அனுமதிக்கிறது. அரசாங்க கட்டுப்பாடுகள் இல்லாமல் தடை செய்யப்பட்ட வெப்சைட்களுக்கு செல்ல VPN-களை பயன்படுத்தலாம்.
குறைபாடுகள்:
VPN-கள் சில குறைபாடுகளுடன் வருகின்றன. VPN சர்வர் வழியே உங்கள் ட்ராஃபிக்கை அனுப்ப VPN-கள் பயன்படுத்தப்படுவதால் நீங்கள் விரும்பும் வெப்சைட்களை அடைய அதிக நேரம் ஆகலாம். நீங்கள் ஒரு தீங்கிழைக்கும் ஃபைலை டவுன்லோட் செய்தால், மோசடி வெப்சைட்டில் உங்களின் தனிப்பட்ட விவரங்களை கொடுத்தால் அல்லது உங்கள் ஐபி அட்ரஸை பொருட்படுத்தாமல் உங்களைக் கண்டறியக்கூடிய கூகுள் அக்கவுண்ட் போன்ற அடையாளம் காணக்கூடிய அக்கவுண்ட்டில் logged in செய்திருந்தால் VPN-ஆல் உதவ முடியாது. நீங்கள் எந்த வெப்சைட்களை பார்க்கிறீர்கள் என்பது VPN சர்விஸுக்கு தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெய்டு விபிஎன் vs ஃப்ரீ விபிஎன்:
பெய்டு விபிஎன் சேவைகள் பெரும்பாலும் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். NordVPN அல்லது Surfshark VPN போன்ற கட்டண சேவைகள் கூடுதல் அம்சங்கள். அதே போல ஃப்ரீ விபிஎன் ஆப்ஸ்கள் மற்றும் சேவைகள் பெரும்பாலும் உங்களை குறைந்த வேகத்தை வழங்கி, அதிக வேகத்திற்கு பணம் செலுத்தும்படி கேட்கும். எனவே ஃப்ரீ விபிஎன் சேவையைத் தேர்ந்தெடுக்கும் போது கட்டுப்பாடுகளை கவனியுங்கள்.
No comments:
Post a Comment